இதையடுத்து, அவருக்கு மூன்று நிமிடம் நேரம் ஒதுக்குவதாக துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் தெரிவித்தார். அப்போது பேசிய மாயாவதி, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கருக்கு சிலை வைக்கவும் பேரணியாக செல்லவும் தலித் இன மக்களுக்கு சஹரன்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தடை விதித்தது. ஆனால், மே மாதம் 5-ம் தேதி மஹாராணா பிரதாப் ஆதரவாளர்கள் பேரணி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. எங்கள் இன மக்களின் மீது அரசு எடுத்துவரும் அடக்குமுறைக்கு இந்த ஒரு உதாரணம் போதும் என்று கூறினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட குரியன், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது என சுட்டிக்காட்டினார். இதனால், ஆவேசமடைந்த மாயாவதி, நான் இன்னும் பேசி முடிக்கவில்லை.
இடையில் நீங்கள் இதுபோல் குறுக்கீடு செய்யகூடாது. எங்கள் இனத்தவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக எனது கருத்தை பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டால் இந்த அவையில் நான் உறுப்பினராக தொடர்வதில் அர்த்தமில்லை, என்று கூறினார். இதை கேட்டதும் தனது ஆசனத்தில் இருந்து எழுந்த குரியன், மாயாவதியை சமாதானப்படுத்த முயன்றார். இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றால், பாராளுமன்ற விதிமுறைகளின்படி முன்கூட்டியே ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இதனால், மேலும் ஆத்திரமடைந்த மாயாவதி, தனது இருக்கையை விட்டு ஆவேசமாக எழுந்து, எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்யப் போகிறேன் என்று சப்தமாக கூறியவாறு அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து இதர சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதை தொடர்ந்து நாடாமளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டினார். குறிப்பபாக உத்தரப்பிரதேசத்தில் இந்த பிரிவினருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இதை நாடாளுமன்றத்தில் எழுப்ப தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இந்த நிலையில் எம்.பி.யாக நீடிப்பதில் அர்த்தம் இல்லை என்று கருதுவதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து மாநிலங்களவை தலைவர் அமித் அன்சாரியை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்து, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை விதிகளுக்கு மாறாக மாயாவதி நடந்துகொண்டதாக பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்தபோதிலும், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்டவை மாயாவதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.