July 13, 2017
நடிகர் திலீப்பின் வக்கிரம் அம்பலம்: நடிகை பாவனாவின் நிர்வாண போட்டோ வேணும் !
நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கைதாகி 2 நாள் போலீஸ் காவலில் உள்ளார் நடிகர் திலீப். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை பாவனாவை தாக்கி அவரது நிர்வாண போட்டோவை எடுக்க பணம் கொடுத்த விவகாரம் தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனாவை சிலர் காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்தனர். அது தொடர்பாக பல்சர் சுனில் என்பவர் உட்பட சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக சமீபத்தில் அவரிடமும், அவரது மேலாளர் அப்புண்ணி மற்றும் இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடமும் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மேலும், பாவனாவை காரில் கடத்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தி வரும் ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனில் கடிதத்தில் தெரிவித்ததை அடுத்து, காவ்யா மாதவனின் கடையில் போலீசார் கடந்த 1-ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பிற்கும், காவ்யா மாதவனுக்கும் எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகர் திலீப் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கடந்த 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட திலீப்பை போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாராணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன. நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோ எடுத்து தருமாறு நடிகர் திலீப் கூறியது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டே திலீப் 1.50 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
நடிகர் திலீப்பின் வக்கிரம் அம்பலம்: நடிகை பாவனாவின் நிர்வாண போட்டோ வேணும் !
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.