Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2017

பிக்பாஸ் பற்றி விமர்சனம் செய்துவிட்டு பல்டி அடித்த நடிகை ஸ்ரீபிரியா


பிக்பாஸ் வீட்டில் இரண்டு அரசியல் ரவுடிகள் இருக்கிறார்கள் என்று நடிகை ஸ்ரீபிரியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது விதி.

தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து பிரபல நடிகை ஸ்ரீபிரியா சர்ச்சைக் கருத்து ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதாவது, பிக்பாஸ் வீட்டில் இரண்டு அரசியல் ரவுடிகள் இருக்கிறார்கள். யாரென்று தெரியுமா? என்று பதிவிட்டிருந்தார்.

இதனை படித்த ரசிகர்கள் , ஜுலியை கட்டம் கட்டும் நடன இயக்குநர் காயத்திரி ரகுராமும் , ஹார்த்தியும் தான் என்று பதிவிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து அவர் மற்றொரு டுவிட்டர் பதிவில், நான் அப்படி கூறவில்லை, பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு பிரிவாக இருப்பது பற்றி தான் கூறினேன் என்று பல்டி அடித்து விட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.