July 4, 2017
தம்பிதுரை காட்டம் : ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதன் மூலம் மாநில உரிமை பறிப்பு !
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, டெல்லியில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார்.
அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சசிகலாவின் ஆலோசனைபடிதான் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் என்ற கேள்வியை என்னிடம் கேட்பது சரியாக இருக்காது. இதை எடப்பாடியிடம் கேட்டால்தான், அவராக ஆட்சி நடத்துகிறாரா அல்லது யாருடைய ஆலோசனையின் பேரில் ஆட்சி நடத்துகிறாரா என்பது தெரியும். திரையரங்குகளுக்கு மாநில அரசின் கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்பது பற்றி, அத்துறை அமைச்சர்தான் பதில் கூற வேண்டும். நான் கூற முடியாது.
மத்திய அரசு, புதிதாக கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டம், மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல்தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. குறிப்பாக, பெரிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவைகளுக்கு ஏற்கனவே மாநில அரசு வரி விதித்து, வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால், தற்போது இந்த புதிய வரி விதிப்பு முறையால், அந்த அதிகாரம் முழுவதும் மத்திய அரசின் கைக்கு சென்றுவிட்டது. இதனால் மாநில அரசுகளுக்கு மிக பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு, மாநிலங்கள் நிதி ஆதாரம் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி ஆய்வு கூட்டத்தில், மாநில அரசுகள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதிலளிக்கையில், 5 ஆண்டுகள் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டுவதற்காக மத்திய அரசு கூடுதல் நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்கி உதவும்’ என்றார். ஆனால் மாநில அரசுகள் சார்பில், 5 ஆண்டுகள் மட்டும் கொடுத்தால் போதாது, நிரந்தரமாகவே கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசு, அதை செய்யும் என்று நம்புகிறோம். குடியரசு தலைவர் தேர்தலில் பாஜ வேட்பாளரை அதிமுக நிபந்தனை இன்றி ஆதரிக்கிறோம் என்று கூறுவது தவறு. பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் பேசி ஆதரவு கேட்டார். முதலில் பாஜதான், எங்களிடம் ஆதரவு கேட்டது. உடனே, முதல்வர், கட்சி தலைமையோடு கலந்துபேசி, பாஜ வேட்பாளரை ஆதரிப்பதாக முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பன் குசும்புக்காரன் மேல உட்கார முடிவு பண்ணிட்டான் !!
தம்பிதுரை காட்டம் : ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதன் மூலம் மாநில உரிமை பறிப்பு !
Reviewed by Admin
on
July 04, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.