Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2017

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக !


கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள் கடந்த மே மாதம் முதலே போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும் கதிராமங்கலம் கிராமத்துக்கு நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சை, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் கதிராமங்கலம் மக்களுகுக் ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். பல்கலைக் கழக வளாகத்துக்குள்ளேயே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.