Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 26, 2017

கதிராமங்கலத்தில் நூதன போராட்டம்: தமிழர்களை வேற்றுகிரகவாசிகளாக நடத்தும் மத்திய அரசு !


கதிராமங்கலத்தில் 15-ஆவது நாளாக மக்கள் நடத்திய காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் சேவை இயக்கத்தினர் தங்கள் உடலில் வெள்ளை நிற சாயத்தை பூசிக் கொண்டு வேற்றுகிரக வாசிகள் போல் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் 30-ஆம்தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால், பதற்றமடைந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 10 பேரையும் வரும் 28-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேல் காலமானதைத் தொடர்ந்து அவருக்குக் கடந்த சனிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கிய மதுரை கிளை நீதிமன்றம்.

ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அய்யனார் கோயில் தோப்பில் குடியேறி போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று 15-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடந்தது. இதில் 60 பேர் பங்கேற்றனர்.

அப்போது கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க சண்முகசுந்தரம், உழவர் உரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தங்கராசு, மக்கள் விவசாய சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கதிராமங்கலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் உடல் முழுவதும் வெள்ளை நிறத்தாலான சாயத்தை பூசிக் கொண்டு வேற்று கிரகவாசிகள் போல வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது மக்கள் இயக்கத்தினர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை வேற்று கிரகவாசிகள் போல் நடத்துகின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பாராமுகம் காட்டுகிறது. இதை வெளிப்படுத்தும் விதமாகதான் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.