Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2017

காரில் போன மனைவியை காணோம் இன்ஸ்பெக்டர் சார் !


கார்த்திக் என்ற அந்த நடுத்தர வயது தொழிலதிபர், கார் ஓட்டிச் சென்ற தனது மனைவியை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்க வருகிறார். அப்போது கார்த்திக்கும், இன்ஸ்பெக்டருக்கும் நடந்த உரையாடல்.....

கார்த்திக்: காரை எடுத்துக்கொண்டு ஷாப்பிங் போகிறேன் என கூறிவிட்டு எனது மனைவி கிளம்பி சென்றவர்தான்.., இன்னும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இன்ஸ்பெக்டர்: உங்க மனைவியின் உயரம் என்ன?

கார்த்திக்: நான் அளந்து பார்த்தது கிடையாது.

இன்ஸ்பெக்டர்: முடி கலர் எப்படி இருக்கும்?

கார்த்திக்: அது சீசனுக்கு தக்கபடி மாற்றிக்கொள்ளப்படும்.

இன்ஸ்பெக்டர்: மச்ச அடையாளங்கள் ஏதாவது சொல்லுங்கள், அவர் என்ன கலர் டிரஸ் போட்டுக்கொண்டு வெளியே போனார்?

கார்த்திக்: மச்சத்தை கவனித்தது இல்லை, வெளியே போகும்போது, மஞ்சையோ, பச்சையோ ஒரு கலரில் ஆடை அணிந்திருந்தார்.

இன்ஸ்பெக்டர்: அவர் காரை, ஓட்டுவாரா, என்ன கலர் காரில் வெளியே போனார்?

கார்த்திக்: கார் ஓட்டுவார். அவர் போனது ஆடி ஏ8 கருப்பு வண்ண கார். 3.0 லிட்டர் வி6 இன்ஜின், 333 குதிரை சக்தி வெளிப்படுத்த கூடியது. எல்இடி லைட் வசதி கொண்ட கார். காரின் முன்பக்க இடது கதவின் ஒரு ஓரத்தில், சிறு சிராய்ப்பு இருக்கும். இவ்வாறு கூறிய பரத், தேம்பி அழ ஆரம்பித்தார்.

இன்ஸ்பெக்டர்: கவலைப்படாதீங்க சார் உங்க காரை எப்படியும் கண்டுபிடித்து தந்துவிடுகிறோம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.