Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2017

விளாசிய சீமான்: பெயருக்குதான் அதிமுக அரசு.. தமிழகத்தை ஆள்வது பாஜக !


தமிழகத்தில் அதிமுக அரசு என்றுதான் பெயர் ஆனால் பாஜகதான் ஆள்கிறது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் தமிழகத்தை இன்னொரு சோமாலியாவாக மாற்ற முயற்சி நடக்கிறது என்றும் சீமான் சாடினார்.

கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நேற்று சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்வர் கிராம மக்கள்தான் முதலில் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர் அதனாலேயே போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கதிராமங்கலம் தடியடி தொடர்பாக முதல்வர் பேசியிருப்பது பொறுப்பற்றதனமானது என சாடினார் அங்கு நிலம், நீர், காற்று அனைத்தும் மாசுபட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. எனவே மக்கள் அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகளை அனுப்பி மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக, போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் சீமான் தெரிவித்தார்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் தமிழகத்தை இன்னொரு சோமாலியாவாக மாற்ற முயற்சி நடக்கிறது என்றும் சீமான் குற்றம்சாட்டினார். மக்களின் கருத்தை கேட்டு தான் திட்டங்களை முடிவு செய்வோம் என கூறுகிறார்கள். ஆனால் மக்கள் எதிர்க்கும் திட்டத்தை செயல்படுத்த எதற்காக முயற்சி செய்கிறார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மக்கள் பிரச்சனைகளில் தமிழக அரசு மவுனமாக இருக்கிறது. பெயர் தான் அதிமுக அரசு ஆனால் ஆள்வது பாரதிய ஜனதா அரசு என்றும் சீமான் விளாசினார். கதிராமங்கலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. கதிராமங்கலம் சென்று தான் போராட வேண்டும் என்றில்லை. தமிழகத்தின் எந்த இடத்தில் இருந்தும் கதிராமங்கலம் மக்களுக்காக குரல் கொடுப்போம் என்றும் சீமான் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.