July 9, 2017
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாபெரும் பேரணி: கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி !
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்து நாகை மாவட்டம் கடலங்குடியில் இருந்து பதுப்பட்டினம் வரை 50 கி.மீ. தூரம் மாபெரும் கண்டன பேரணியை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
தடுப்பணை கட்டுவதற்காக மண்ணின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகளும் முடிவடைந்து அந்த திட்டத்துக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். ஆனால் அவர் மறைவுக்கு பின்னர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அந்த தடுப்பணையை உடனே கட்டவேண்டும் என பல்வேறு கட்சியினரும், பல விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று கடலங்குடியில் இருந்து புறப்பட்டு நாகை மாவட்டத்தில் கடைசி பகுதியான புதுப்பட்டினம் வரை 50 கி.மீ. தூரத்துக்கு பேரணியாக சென்றனர்.
இதன் பிறகும் அணைக் கட்டவில்லை தமிழக அரசை திரும்பி பார்க்க வைக்கும் அளவில் மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாபெரும் பேரணி: கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி !
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.