திருமணத்திற்கு முன் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். அதனால் திருமணத்திற்கு முன்னரே சில உடற்பயிற்சிகளை செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
உங்களின் முகம் திருமணத்தின் போது எப்படி உள்ளது என்று யாரும் கவனிக்க மாட்டார்கள். எனவே முகம், கை, கால்கள், உடல், கூந்தல் என்று அனைத்தையும் நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு 5 நாட்கள் முன் வெயிலில் சுற்றுவது, மன அழுத்தத்துடன் இருப்பது, அழுகை, தூக்கமின்மை போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்களின் முகத்தை அதிகமாக பாதிக்கும்.
திருமண அழைப்பிதல் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னதாகவே அவர்களின் பெயர்களை மறக்காமல் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களை கவனிக்க வேண்டியது நமது கடமை என்பதால் இரவில் அவர்கள் ஓய்வெடுக்க தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமணத்தன்று சந்தோஷமாக இருக்க உங்களுக்கு பிடித்தவற்றை செய்து, உங்களின் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் மிகவும் அழகாக தெரிவீர்கள்.
உங்களது திருமணத்திற்கு, உடைகளை வடிவமைப்பது, மேக்கப் போடுவது என்று உங்களது சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் உதவி செய்திருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அல்லது ஏதேனும் ஒரு பரிசை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.