Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2017

மத்திய அரசின் திட்டத்தை ஆட்டையப் போட்ட முகேஷ் அம்பானி !


ஜனவரி மாதம் மத்திய அரசு, வேமாக வளர்ந்து வரும் நாட்டின் டெலிகாம் சந்தையை ஊக்குவிக்கும் வகையில், 2,000 ரூபாய் மதிப்பிலான 4ஜி ஸ்மார்ட்போன்களை மானிய விலையில் மக்களுக்கு விற்பனை திட்டமிட்டது.

இதற்காக இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதன்பின் இந்த திட்டம் குறித்து எவ்விதமான அறிவிப்புகளும் இல்லாத நிலையில், இதே திட்டத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் புதிய டெலிகாம் நிறுவனமான ஜியோ காப்பி அடித்துள்ளது (முழுமையாக பயன்படுத்திக்கொண்டது).

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 500 ரூபாய்க்கு பியூச்சர் போன் அறிமுகம் செய்யும் திட்டத்தை தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் வெளியிட்டு இருந்தது.

மத்திய அரசின் அழைப்பை ஏற்றுவந்த இந்திய நிறுவனங்களில், இத்திட்டத்திற்கு மிகவும் ஆர்வம்காட்டிய இன்டெக்ஸ் நிறுவனம் தான் தற்போது ஜியோவின் 500 ரூபாய் மதிப்புடைய 4ஜி பியூச்சர் போனை தயாரிக்கிறது.

சீன நிறுவனத்துடன் சேர்ந்து 500 ரூபாய்க்கு பியூச்சர் போன் தயாரிக்க திட்டமிட்டு இருந்த ஜியோ, தற்போது திடிரென இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான இன்டெக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையை தலைகீழாக புரட்ட வரும் ஜியோவின் 500 ரூபாய்க்கு பியூச்சர் போன் வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஜியயோ மற்றும் இன்டெக்ஸ் நிறுவன கூட்டணியில் உருவாகும் இந்த 4ஜி பியூச்சர் போனுக்கான விலையை ஜியோ மட்டுமே நிர்ணயம் செய்யும், நிர்ணயம் செய்யப்படும் விலைக்கும் அதிகமான தொகையை ஜியோ மாணியமாக அளிக்கும்.

மேலும் இந்த போனை சந்தைப்படுத்துவதும் ஜியோ நிறுவனம் மட்டும் தான் என்பதால், இன்டெக்ஸ் நிறுவனம் தயாரிப்பு பணிகளில் மட்டுமே ஈடுப்படும்.

ஜியோ இந்த 4ஜி போனை இன்டெக்ஸ் நிறுவனத்துடன் மட்டும் அல்லாமல் உலகின் பல்வேறு நிறுவனத்திடமும் இருந்து பெறுகிறது. குறிப்பாக சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செயய் உள்ளது ஜியோ.

இத்திட்டம் ஜியோ தளத்தில் புதிய வாடிக்கையாளர்களை பெரிய அளவில் சேர்ப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பாகும்.

தற்போதைய நிலையில் ஜியோ நிறுவனம் சீனாவின் somIntexe என்ற நிறுவனத்துடன் 20 மில்லியன் போன்களை ஆர்டர் செய்துள்ளது.

இன்டெக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்த ஜியோ எவ்வளவு போன்களை ஆர்டர் செய்துள்ளது என தெரிவிக்கவில்லை. இதேபோல் ஜியோ மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா ஆகிய நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆக ஜியோ நிறுவனம் இத்திட்டத்தை மிகப்பெரிய அளவில் அறிமுகம் செய்யபோகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.