July 4, 2017
ஜப்பான் பிரதமர் கடும் கண்டனம்: தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை !
உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது. இன்று அதிகாலை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை தாக்கியழிக்கும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. குறிப்பிட்ட அந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியில் விழுந்துள்ளதை அந்நாட்டு ஊடகங்களும் உறுதி செய்துள்ளன. இதனால் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நாளுக்கு நாள் போர் பதற்றத்தை அதிகரித்து வருவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச சமூகத்தின் கண்ணடனத்தையும் மீறி வடகொரியா மேலும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை அரங்கேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் உதவியுடன் வடகொரியாவிற்கு அழுத்தம் தர ஜப்பான் முயற்சி செய்யும் என்றார். மேலும் சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபருடன் இணைந்து இதற்கு நிரந்தர தீர்வு காண முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார்.
எச்சரிக்கைகளை மீறி வடகொரியா ஆயுத சோதனை நடத்தி வருவது குறித்து ஜப்பான் பிரதமரிடம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ள நிலையில், மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுதம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதால் தற்போது உலகநாடுகளின் கவனம் வடகொரியாவின் பக்கம் திரும்பியுள்ளது. வடகொரியாவில் கிம் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி சர்வாதிகாரமிக்கது என்ற விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் பிரதமர் கடும் கண்டனம்: தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை !
Reviewed by Admin
on
July 04, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.