Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2017

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ராம்நாத் கோவிந்த் முன்னிலை: குடியரசுத் தலைவர் தேர்தல் !


குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகிக்கிறார்.

மதியம் 1.45 நிலவரப்படி ராம்நாத் கோவிந்த் 60,683 வாக்குகளும் மீராகுமார் 22,941 வாக்குகளும் பெற்றுள்ளனர். அசாம், அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பிஹார் மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்தன என்று தேர்தல் அதிகாரி அனூப் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (வியழக்கிழமை) காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

பெறப்பட்ட வாக்குப் பெட்டிகள் அகர வரிசைப்படி திறக்கப்பட்டு 4 மேசைகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவு குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அதன் பிறகு மாலை 5 மணி வாக்கில் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்று மக்களவை செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான அனூப் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை யடுத்து கடந்த 17-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் தலா ஒன்று என மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்ட வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் 99 சதவீத வாக்குகள் பதிவாயின.

இதில் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.