July 11, 2017
நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு நிரந்தர தடை விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்
நைலான் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் அதிரடியாக தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
காற்றாடிகளை பறக்கவிட கண்ணாடி துகள்களைக் கொண்ட மாஞ்சா நூல் அதிகம் பயன்படுத்துகிறது. இந்த மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பீட்டா அமைப்பு சார்பில் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கண்ணாடி, உலோகங்கள் மற்றும் பிற கூர்மையான துகள்கள் பூசப்பட்ட மாஞ்சா நூல்கள் மின்சாரத்தை எளிதில் கடத்தும் திறன் கொண்டவை. எனவே, பட்டம் விடும்போது மாஞ்சா நூல் மின்கம்பியில் உரசினால், பட்டம் விடுபவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதுடன், அந்த வழியாக செல்வோரும் நூலைத் தொட்டால் உயிரிழக்க நேரிடுகிறது என்று பீட்டா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நைலான் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நிரந்தரத் தடையாக்கி இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மாஞ்சா நூல்கள் தயாரிக்க, விற்க, வாங்க, பயன்படுத்த அனைத்திற்கும் தடை விதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.
நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு நிரந்தர தடை விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.