Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2017

உச்ச நீதிமன்றம் அதிரடி: மாட்டிறைச்சி உத்தரவுக்கு தடை ! பரபரப்பு தீர்ப்பு !!


மாட்டிறைச்சி குறித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது.

கடந்த மே மாதம், நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மேலும், கால்நடைகள் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, சந்தைகளில் மட்டுமே விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனை செய்ய வேண்டும். அதுவும் விவசாய தேவைக்கு மட்டுமே. இதை மாடு விற்பவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பல வழக்குகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. அப்போது, இன்னும் 3 மூன்று மாத காலத்திற்கு மாட்டிறைச்சி குறித்து எந்த புதிய கட்டுப்பாடுகளையும் அமுல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடையேயும் மத்திய அரசு ஆலோசனை கேட்டு வருவதாகவும், வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் அதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.