Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2017

தில்லியில் பிரதமர் மோடியின் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகள் கைது


தில்லியில் பிரதமர் மோடியின் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற தமிழக விவசாயிகளை தில்லி காவலர்கள் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தில்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தின் முன்பு அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 70 விவசாயிகளை தில்லி காவலர்கள் கைது செய்தனர்.

இது குறித்து அய்யகண்னு , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக மேலும் 100 நாட்களுக்கு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.