Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 8, 2017

பாஜக-வுக்கு சிவசேனா சாபம்: தனது பக்தர்களாலேயே மோடி வீழ்வார் !


“இந்திராகாந்தியை போல் மோடியின் வீழ்ச்சிக்கும் அவரது பக்தர்களே காரணமாக அமையும் சூழல் வரும்” என்று சிவசேனா கூறியுள்ளது.

ஜி.எஸ்.டி. நடைமுறையால் மும்பை மாநகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு, ரூ. 647 கோடியே 34 லட்சத்தை, மகாராஷ்டிர மாநில அரசு வழங்கியுள்ளது.இதற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் நடைபெற்றது.

நிதியமைச்சர் சுதீர் முங்கண்டிவார், மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வரிடம் காசோலையை வழங்கினார்.அப்போது, பாஜக கவுன்சிலர்கள் ‘மோடி, மோடி’ என்று கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து, சிவசேனா கவுன்சிலர்களுக்கும், பாஜக கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு சிவசேனா தனது பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதியுள்ளது.

அதில், மோடி பக்தர்களாலேயே மோடிக்கு வீழ்ச்சி வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்திராகாந்தியின் பெயரை குறிப்பிட்டும் கோஷம் எழுப்பப்பட்டது. ‘இந்தியாவே இந்திராதான்’ என்று அவரது பக்தர்கள் கோஷமிட்டு, தேசத்தை அவமதித்தார்கள். இது புரட்சி தீப்பொறிக்கு வித்திட்டு, அவரது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

உண்மை என்னவென்றால், 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது இந்திராகாந்தி வெற்றிபெற்றது மட்டுமின்றி, அந்நாட்டை சிதற அடித்து ஓடவிட்டார். எனினும், இந்திராகாந்தியின் ஆதரவாளர்கள் வெளிப்படுத்திய மிதமிஞ்சிய பக்தியால் தான் அவர் வீழ்ச்சி அடைந்தார் என்பதை பாஜக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

எனவே, இந்த சொந்த பக்தி குறித்து பாஜகவினர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இன்றைக்கு மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் அவரது பக்தர்கள் நாளைக்கு அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமையலாம்.இவ்வாறு ‘சாம்னா’ தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.