Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2017

பரப்பன அக்ரஹாரா சிறையைப் பிரித்து மேய்ந்த சசிகலா "பவர்"! ஒவ்வொரு வேலைக்கும் ஒரு "ரூம்" !!


பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி ரூபா ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

பெங்களூர் சிறையின் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, கடந்த வாரம் அச்சிறையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு நடந்த முறைகேடுகள் குறித்து அவருக்கு தெரியவந்தது.

சசிகலா அறையில் தனி சமையலறை உள்ளிட்ட வசதிகள் இருப்பதும் தெரியவந்தது. சொகுசு வசதிகளுக்காக சசிகலா தரப்பில் இருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு புகார் அறிக்கையாக அனுப்பினார் ரூபா. இந்த ஊழலில் சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த பதற்றமான நிலையில் ரூபா, புகாருக்குள்ளான சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் இருப்பது டிஐஜி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் பார்வையாளரை சந்திக்க ஒரு அறையும், டிவி பார்க்க, யோகாசனம் செய்ய என ஒவ்வொரு அறையும் இருந்துள்ளது.

மேலும் சிறையிலேயே சசிகலா குக்கர் வைத்து சமைக்கவும் வசதி செய்யப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. சிறையில் முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற அதிகாரி வினய் குமார் இன்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.