Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 3, 2017

நடவடிக்கை எடுக்கப்படுமா? அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது அம்பலம்!


அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்தார் ஓபிஎஸ்.

அப்போது சசிகலா முதல்வராக பதவியேற்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் சகல வசதிகளுடன் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது கூவத்தூர் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சென்னை ராயபுரம் மீனவர்கள் நலசங்கத்தினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்கு பதிலளித்த நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் சட்டவிரோதமாக கட்டியிருப்பதாக கூறியுள்ளார். மேலும் கடலோர ஒழுங்குமுறை விதியில் இருந்து கூவத்தூர் விடுதிக்கு விலக்கு ஏதும் தரவில்லை என அவர் கூறினார்.

கூவத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் நல சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மீனவர்கள் நலச்சங்கத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர். மேலும் விடுதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.