Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2017

மு.க.ஸ்டாலின் பகீர்: சேகர் ரெட்டியை கொலை செய்ய ஜெயிலில் திட்டம் தீட்டுகிறார்கள் !


மணல் மாஃபியா சேகர் ரெட்டியை கொலை செய்ய சிறையில் திட்டம் தீட்டுகிறார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்று பார்த்தால், சிறைச்சாலைகள் பற்றி அதிகம் பேசக்கூடிய நிலை வந்திருக்கிறது. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து, சிறப்பு வசதிகள் எல்லாம் செய்து கொண்டதாக, பல செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

மணல் மாஃபியா கும்பல் தலைவர் சேகர் ரெட்டி, இப்போது ஜாமீன் பெற்றுள்ளார். அவரை கொலை செய்ய சிறையில் இருப்பவர்களே திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சிறை அதிகாரிகளே எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து, சேகர் ரெட்டியே டி.ஜி.பி., கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அவரைக் கொல்ல முயற்சிக்கும் காரணம் என்னவென்றால், அவர் உயிரோடு இருந்தால், பல விவகாரங்கள், பல செய்திகள் எல்லாம் வெளியில் தெரிந்து விடும் என்பதால் தான் என்று ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

சிறைச்சாலைகளில் மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த ஆட்சி நடக்கிறது.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.