Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2017

அதிர்ச்சி தகவல்: கலாபவன் மணி மரணத்திற்கு திலீப் காரணமா ?


நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் மீது பல திடுக்கிடும் புகார்கள் எழுந்து வருகிறது.

சென்ற ஆண்டு மரணமடைந்த கேரள நடிகர் கலாபவன் மணி மரணத்தில், திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கலாபவன் மணி மரணம் தொடர்பான வழக்கில், இதுவரை கேரள போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.

இந்நிலையில்தான் பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, திலீப்தான் கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் என அவரின் சகோதரர் ராமகிருஷ்ணன், சிபிஐ அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதேபோல், மலையாள சினிமா இயக்குனர் பைஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலும், கலாபவன் மணியின் மரணத்திற்கு திலீப்தான் காரணம் எனவும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுபற்றி சிபிஐ அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே பாவனா வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டதால் எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள், கலாபவன் மணி மரணத்திலும் அவருக்கு தொடர்பு இருக்கிறது என எழுந்துள்ள புகார் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.