Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2017

டிடிவி தினகரன் சட்டசபையில் புகழாரம்: அமைதியின் சின்னம் சசிகலா !!


சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அமைதியின் சின்னம் எனவும். டிடிவி தினகரன் புன்னகை மன்னன் எனவும் அதிமுக எம்எல்ஏ பழனியப்பன் சட்டசபையில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்று அணிகள் தற்போது உள்ளன. இதில் உள்ளவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது தங்கள் ஆதரவு தலைவரை புகழ்ந்து வருகின்றனர். இதில் அதிமுக எம்எல்ஏ பழனியப்பன் தினகரன், சசிகலா ஆதரவு அணியில் உள்ளார்.

ஆரம்பத்தில் எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் எம்எல்ஏ அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தினகரன் அணிக்கு சென்று ஆதரவளித்தார். இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் பேசிய பழனியப்பன் சசிகலா மற்றும் தினகரனை புகழ்ந்து பேசியுள்ளார்.

தற்போது சசிகலா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கைதியாக உள்ளார். இந்நிலையில் சசிகலாவை அமைதியின் சின்னம் என மான்புமிகு தமிழக சட்டசபையில் புகழ்ந்துள்ளார் பழனியப்பன். மேலும் தினகரனை புன்னகை மன்னன் எனவும் புகழ்ந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார் பழனியப்பன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.