Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2017

ஸ்டாலின் கோரிக்கை: ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் !


ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் 11 நாட்களாக கதிராமங்கலம் கிராமத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்களமாக விளங்கி வரும் இங்கு அமைதியை கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.

 தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது ஓஎன்ஜிசி. கடந்த மாதம் 30 ஆம் தேதி விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.

இதனை அடுத்து, அங்கு போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததோடு, 9 பேரை கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் 11 நாட்களாக முழுகடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று இதுகுறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. கதிராமங்கலத்தில அமைதி திரும்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரக் கூடாது என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை சட்டசபையில் கொண்டு வர வேண்டும் என்றும் அப்படி கொண்டு வந்தால் அதனை திமுக ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் எம்.சி. சம்பத், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதி வழங்காது என்றும் அமைச்சர் பதில் அளித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் பிரச்சனை விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.