Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2017

நாப்கின்களுக்கும் ஜிஎஸ்டி... படாத பாடுபடும் கொல்கத்தா பாலியல் தொழிலாளிகள்!


சானிட்டரி நாப்கின்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் நாப்கின்களை பயன்படுத்த விரும்பாத நிலைக்கு செல்வர் என்றும் இதனால் அவர்களுக்கு சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிகிறது.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவது சுகாதாரத்துக்கு நன்மை விளைவிக்கும். மாதந்தோறும் பயன்படுத்தும் துணிகளால் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நாப்கின்களை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு பள்ளி, கல்லூரிகள் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு எனப்படும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சானிட்டரி நாப்கின்கள் மீது 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இது விலையேற்றத்துக்கு வழி வகுத்தது. இந்த விலையேற்றம் நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சிரமமாக இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், இதனால் பாலியல் தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சோனாகஞ்ச் என்ற பகுதிதான் ஆசியாவிலேயே மிகப் பெரிய பாலியல் தொழில் நடைபெறும் பகுதியாகும். இங்குள்ள பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாப்கின்களை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். அதை பயன்படுத்துவதை அருவெறுப்பாகவே கருதினர்.

சுகாதாரம் தொடர்பாக பாலியல் தொழிலாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது அவர்களும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தி வருகின்றனர். ஜிஎஸ்டியால் நாப்கின்களின் விலை அதிகரித்துள்ளதால் இவர்கள் நாப்கின்களை விட்டுவிட்டு பழைய நிலைக்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் சுகாதாரத்துக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.

பாலியல் தொழிலாளிகளுக்கான அமைப்பில் சுமார் 1.30 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர். ஜிஎஸ்டி குறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், ஆண்கள் பயன்படுத்தும் கான்டத்துக்கு வரி விலக்கு அளித்திருப்பது பாலியல் தொழிலாளிகளுக்கு நிம்மதி அளித்தாலும் நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டியால் அவர்கள் நாப்கின் பயன்படுத்தாத காலத்துக்கே சென்று விடுவர். ஏற்கெனவே நாப்கின் பயன்படுத்துவதை அருவெறுப்பாக கருதும் அவர்கள் பயன்படுத்தாமல் விட்டுவிடும் நிலை ஏற்படலாம்.

கடந்த 2000-ஆம் ஆண்டில் பாலியல் தொழிலாளிகளில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தியவர்கள் 20 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போது 85 சதவீதத்துக்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயன்பாடு அதிகரித்ததற்கு காரணம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும், மானிய விலையில் கிடைக்கப்பட்ட நாப்கின்களுமே ஆகும்.

கடந்த 1995-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் பாலியல் தொழிலாளிகளுக்கென்று மாதந்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பாக்கெட்டுகள் வரை சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இனி அந்த எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

கான்டம்களின் விலை ஏற்றம் அடையாததால் எய்ட்ஸ் நோய் பரவுவது நிச்சயம் தடுக்கப்படும். இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. வரும் 2025-இல் எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.