July 16, 2017
பெண்களை இழிவாக பேசிய பாஜக பெண் எம்பி ரூபா கங்குலி மீது வழக்கு !
பெண்களை இழிவாக பேசிய பாஜக பெண் எம்.பி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் பாஜகவின் பெண் எம்.பி ரூபா கங்குலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், மேற்கு வங்க பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகாமல் 15 நாட்கள் கூட வாழ முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ரூபா கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் விதமாக பேசியது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பேசியது, தரம் தாழ்ந்து பெண்களை விமர்சனம் செய்ததாகவும், ரூபா கங்குலி மீது பாரக்பூர் அருகே உள்ள நிமிடா காவல் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் பெண் எம்பி ஒருவர் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியது பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை இழிவாக பேசிய பாஜக பெண் எம்பி ரூபா கங்குலி மீது வழக்கு !
Reviewed by Admin
on
July 16, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.