வன்முறைத் தூண்டியதாகக் கூறி 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டுத் தீட்டிய சதி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார் என்ற புகார் எழுந்தது.
இதையடுத்து சீமான் மீது வன்முறையை தூண்டியதாகக் கூறி 4 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து சீமான் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த மீனவர்களின் பிரச்சனையை கடந்த 5 ஆண்டுகளாக நான் பேசி வருகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 'நெய்தல் படை' அமைத்து, மீனவர்களைப் பாதுகாப்போம் என்று கூறி வருகிறேன்.
இந்த நெய்தல் படையில் மீனவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், அவர்களின் கையில் துப்பாக்கியைக் கொடுப்போம் என்று பல கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் என் மீது பாயாத வழக்கு இப்போது பாய்ந்துள்ளது.
நான் மத்திய அரசை விமர்சித்துத் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறேன். அதனால் தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு என்னைக் குறித்து சதித் திட்டம் தீட்டி வருகிறது. என்னைக் கைது செய்யவும் தூண்டி வருகிறது. என்னை எப்படியாவது சிறையில் அடைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்று சீமான் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.