Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 3, 2017

எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தை திரும்ப பெற சீனா வலியுறுத்தல்


சிக்கிம் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை திரும்ப பெறுமாறு இந்தியாவை சீனா கேட்டுக் கொண்டுள்ளது. இருதரப்பு எல்லையை பாதிக்காத வகையில் சிக்கிம் எல்லையில் பதற்றத்தை குறைக்க இது உதவும் என சீன அரசு கருதுவதாக அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்குவா (Xinhua) தெரிவித்துள்ளது.

டோங்லா பகுதியில் சீனா சாலை அமைப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனா சாலை அமைப்பது தான் நிதர்சனம் என்கின்றனர் நமது நாட்டின் ராணுவ வல்லுனர்கள். இது குறித்து பேசிய கர்னல் டி.எஸ்.கிரேவால், இரு நாட்டு உறவை சிக்கலாக்கும் நடவடிக்கைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சாடினார்.

மேலும் டோக் லாம் தனது நாட்டின் ஒருபகுதி என குறிப்பிடும் வரைபடத்தை சீனா வெளியிட்டுள்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பிட்ட இந்த பகுதி இந்தியா மற்றும் நேபாளத்திற்கு சொந்தமானது என்பதுடன், இதற்கான ஒப்பந்தம் நம்மிடம் இருப்பதாக இந்தியா விளக்கமளித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

1890-ல்  ஏற்படுத்தப்பட்ட பிரிட்டன் - சீன ஒப்பந்தத்தின் படி இருநாட்டு எல்லையில் உள்ள டோங்லா பகுதி தங்களுக்கு தான் சொந்தம் என சீனா கூறிவருகிறது. ஆனால் 2012-ல் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட சிக்கிம் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானதாகும். எனவே அங்கு சீனாவின் சாலை அமைக்கும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்தனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த சீனா, இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளை புல்டோசர் மூலம் சீனா அழித்தது. இதனால் இரு தரப்பிற்குமிடையே கடந்த 1 மாதமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து துவரை இல்லாத அளவு இருநாடுகளும் அங்கு ராணுவத்தினரை குவித்துள்ளதால் பெரும் பதற்றம் காணப்படுகிறது. இது பரஸ்பர உறவை குலைக்கும் என கூறி படைகளை திரும்ப பெற சீனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.