July 14, 2017
கலாபவன் மணியின் அண்ணன் பரபரப்பு பேட்டி: என் தம்பி சாவில் திலீப்புக்கு தொடர்பு !
நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று அவரின் சகோதரர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கலாபவன் மணியின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கு மாநில போலீசாரிடம் இருந்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை எந்த தெளிவும் ஏற்படவில்லை.
கலாபவன் மணியின் அண்ணன் ராமகிருஷ்ணன் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். மணியின் மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மணிக்கும், திலீப்புக்கும் இடையே நில விவகாரம் தொடர்பான டீலிங் இருந்தது. என் சகோதரரின் மரணத்திற்கு பின்னால் யார் உள்ளார்கள் என்று தெரியவில்லை என்கிறார் ராமகிருஷ்ணன்.
திலீப்புடனான நில டீலிங் குறித்து நான் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். மணி மரணம் குறித்த விசாரணைக்கு திலீப் ஒத்துழைக்கவே இல்லை. நல்ல நண்பராக இருந்தும் மணி இறந்த பிறகு ஒரேயொரு முறை தான் திலீப் எங்கள் வீட்டிற்கு வந்தார் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மணியின் மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருந்தால் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்கிறார் ராமகிருஷ்ணன். கலாபவன் மணியின் மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு உள்ளது என்று இயக்குனர் பைஜுவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாபவன் மணியின் அண்ணன் பரபரப்பு பேட்டி: என் தம்பி சாவில் திலீப்புக்கு தொடர்பு !
Reviewed by Admin
on
July 14, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.