Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

நடிகை சார்மி நீதிமன்றத்தில் வழக்கு: பெண் அதிகாரிகளே விசாரணை நடத்த வேண்டும் !


போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை அதிகாரிகள் குழு முன் ஆஜராக எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடிகை சார்மி  வழக்குத் தொடர்ந்து உள்ளார்.

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, நடிகர்கள் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகை சார்மி கடந்த 21ம் தேதியே விசாரணைக்கு ஆஜராகி இருக்க வேண்டும். அதை அவர் தவற விட்டதால் வரும் 26ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று  சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிராக சார்மி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் ரத்த மாதிரி, தலைமுடி, நகம் போன்றவற்றை வலுக்கட்டாயமாக விசாரணை அதிகாரிகள் கேட்டுப்பெறுகின்றனர்.

இது சட்டத்திற்கு எதிரானது. என்னிடம் விசாரணை நடத்தும்போது எனது வழக்கறிஞர் என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். அதேபோல், பெண் அதிகாரிகள் மட்டுமே என்னிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.