July 9, 2017
தமிழகத்தை அமைதிப் பூங்கா என எப்படி கூற முடியும்: பொன்னார் குற்றச்சாட்டு ! ஆமா ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தில் செயல்படுகின்றன !!
தமிழகத்தை மையமாக வைத்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தவிர மேலும் பல தீவிரவாத இயக்கங்கள் செயல்படுவதாக, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி இருக்கிறது. ஆனால், இலங்கையில் எல்லை தாண்டி மீன் பிடிக்க கூடிய மீனவர்களுக்கு அபராதம் மற்றும் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு தீர்மானம் நிறைவேற்றி இருப்பது ஏற்புடையது அல்ல.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. எப்படி அமைதி பூங்காவாக இருக்கிறது என கூற முடியும். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் மட்டுமல்ல; பல பயங்கரவாத அமைப்புகள் தமிழகத்தை மையமாக்கி செயல்பட தொடங்கி இருக்கின்றன.
தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக உளவுத்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் குளங்களை தூர்வார அரசே அனுமதி அளித்து இருக்கிறது. 82 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணை தூர்வாரப்படுகிறது. ஆனால், வறட்சியே இல்லை என மாநில அரசு கூறி இருப்பது வியப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆமா ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தில் செயல்படுகின்றன !!
தமிழகத்தை அமைதிப் பூங்கா என எப்படி கூற முடியும்: பொன்னார் குற்றச்சாட்டு ! ஆமா ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தில் செயல்படுகின்றன !!
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.