Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2017

துணை ஜனாதிபதி பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிப்பு !


பாஜக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

துணை குடியரசுத் தலைவராக உள்ள ஹமீத் அன்சாரியின் பதவிகாலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிவடைகின்றது. இதனையடுத்து புதிய துணை குடியரசு தலைவரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் பாஜக ஆட்சிமன்ற கூட்டம் இன்று டெல்லியில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடுவை தேர்வு செய்துள்ளனர். வெங்கையா நாயுடு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறும்போது," துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடு போட்டியிடுகிறார். மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் வெங்கையாக நாயுடு. பாஜக ஆட்சிமன்ற கூட்டத்தில் இவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை காலை 11 மணிக்கு வெங்கையா நாயுடு வேட்புமனு தாக்கல் செய்வார்" என்று அவர் கூறினார்.

இந்தநிலையில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 ஏதிர்கட்சிகளின் சார்ப்பில் கோபாலகிருஷ்ண காந்தி துணை குடியரசு தலைவர் வேட்பாளராக ஏற்கெனவே தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.