Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

அய்யாக்கண்ணு புகார்: டெல்லி போராட்டத்தை வாபஸ் பெற சொல்லி கொலை மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் !


தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாக அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தமது மனைவியை பார்ப்பதற்காக திருச்சி வந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் நாளொன்றுக்கு 600 முதல் 700 கொலை மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர் குறிப்பிட்டார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தான் மிரட்டல்களுக்கு காரணம் என அய்யாக்கண்ணு பாபரப்பு புகார் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தினால் கார் அல்லது லாரி உள்ளிட்ட வாகனங்களை ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் அழைப்புகள் வருவதாக தெரிவித்தார். தங்களை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு, அவர்களது கட்சி உறுப்பினர்களை தூண்டிவிட்டு தங்களை கொல்ல முயற்சிப்பதாக சாடினார்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் உயிருக்கு ஏதாவது நேருமனால் அதற்கு எச்.ராஜா தான் முழு பொறுப்பு என்றார். கொலை மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை என குறிப்பிட்ட அவர், விவசாயிகளின் போராட்டம் திட்டமிட்டப்படி தொடரும் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.