Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2017

சாலைகளுக்கு சீல்: ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மெரினாவில் போராட்டமா?


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் மெரினாவில் கூட இருப்பதாகத் தகவல் பரவியது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்டப் போராட்டத்தை ஏப்ரல் 12-ம் தேதி துவக்கினர். 100 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகள், பெண்கள் போராடி வருகின்றனர்.

கிராம மக்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், மெரினா கடற்கரை சாலையில் 200-க்கும் மேற்பட்டட போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தை போன்று நெடுவாசல் கிராம மக்களுக்காகப் போராட்டம் நடைபெற்றுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கைக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரை சாலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மெரினாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.