Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2017

மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டம்: கதிராமங்கலத்தில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து !


தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் தாலுகா திருப்பனந்தால் ஒன்றியம் கதிராமங்கலத்தில் 7 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று எண்ணெய் கிணறு பூமியில் பதிக்கப்பட்டிருந்த குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணெய் நிறுவ ஊழியர்களை உள்ளே செல்ல விடாமல் பொதுமக்கள் தடுத்தனர். இதனால், போலீசார் கூட்டத்தை கலைப்பதற்காக பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர்.

இதில், பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கு இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில்  கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த போவதாக நேற்று இரவு தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு ேநற்று இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர் 200க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக அப்பகுதியில் நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ெபாதுமக்கள் வழக்கமாக சர்வீஸ் சாலையில் வாகனத்தை நிறுத்தி நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால், ெமரீனா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், அவர்கள் கலங்கரை விளக்கம், வாலாஜா சாலை பகுதிகளில் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து கடற்கரைக்கு ெசன்றனர்.  ேபாலீசாரின் கெடுபிடியில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினனர்.

சிலர் போலீசாரின் நடவடிக்ைகயை பார்த்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். மேலும், இன்று காலை மெரீனா கடற்கரைக்கு வந்த இளைஞர்களுக்கு கடற்கரை பகுதிக்கு  நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பி சென்றனர். இதனால், மெரீனா கடற்கரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தை போன்று கதிராமங்கலம் மக்களுக்காக  போராட்டம் நடைபெற்றுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கைக்காக போலீசார்  பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.