July 9, 2017
இந்து முன்னணி குண்டர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: இலங்கை அகதிகள் முகாம் மீது !
கோவையில் பூளுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணி அமைப்பின் குண்டர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் பூளுவப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சனிக்கிழமை இரவு கைப்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினருக்கு ஆதரவாக இந்து முன்னணியினர் முகாமிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது நடந்த வாக்குவாதத்தின் போது ஒரு தரப்பினர் இந்து முன்னணி நிர்வாகி ரமேஷ் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த இந்து முன்னணி அமைப்பினர் சனிக்கிழமை நள்ளிரவில் முகாம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்தனர். அங்கிருந்து வெளியேறிய இந்து முன்னணி அமைப்பினர் பூளுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாம் மீது பெட்ரோல் குண்டுகளையும் கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் 17ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தின் மீதே சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது கோவையில் கலவரத்தை தூண்டும் வகையில் இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் ,பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்வம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்து முன்னணி குண்டர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: இலங்கை அகதிகள் முகாம் மீது !
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.