Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2017

என்.ஆர்.ஐ. தொழிலதிபரை கடந்த முயன்ற பாஜக தலைவர் கைது


கேரளா மாநிலம் மல்லாபுரத்தில்  வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரை கடந்த முயன்ற பாஜக தலைவர் உட்பட 7 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் மல்லாபுரத்தில் உள்ள என்.ஆர்.ஐ தொழிலதிபர் ரபீயுல்லா-வின் வீட்டில் ஜூலை 24 ஆம் தேதி காலை 6 மணியளவில் நுழைந்த ஒரு கும்பல் வீட்டின் காவலாளியை துப்பாக்கி முனையில் மிரட்டி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்தனர். அப்போது அந்த கும்பலை சேர்ந்த சிலர் வீட்டின் முன் பாதுகாப்பிற்காக நின்றுள்ளனர். இதை பார்த்த சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே உடனடியாக காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோழிக்கோடு மற்றும் கண்ணூர் பகுதி காவலர்கள், தொழிலதிபர் ரபீயுல்லா-வை கடந்த முயன்ற பாஜக சிறுபான்மை மோர்ச்சா தேசிய துணைத் தலைவர் அஸ்லாம் குறிக்கல், கேசவ மூர்த்தி, ரியாஸ், அர்ஷத், உஸ்மான், ரமேஷ் மற்றும் சுனிலை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் அதில் ஒருவர் காவலர் என தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பாஜக தலைவர் உட்பட 7 பேர் மீதும் காவலர்கள் சட்டவிரோதமாக வீட்டிற்குள் நுழைந்தது ஆள் கடத்தல் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ரபீயுல்லா காணாமல் போனதாகவும், தலைமறைவாக உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது. இதையடுத்து ரபீயுல்லா  தான் வீட்டில் தான் இருப்பதாகவும் கூடிய விரையில் தொழிலை நிறுவனத்தை பார்வையிட வெளிநாடு செல்ல இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இது நடந்த சில நாட்களுக்கு பின்னர் தான் ரபீயுல்லாவை கடத்த முயற்சி நடந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.