Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2017

ஹைகோர்ட் நோட்டீஸ்: புதுச்சேரி சட்டசபைக்கு பின்வாசல் வழியாக பாஜகவை அழைத்து வந்த கிரண்பேடி !


புதுவை சட்டப்பேரவைக்கு 3 நியமன உறுப்பினர்கள் நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்றத்துக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ளலாம். ஆனால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேலாகியும் அந்த பதவிகளை நிரப்ப யாருடைய பெயரையும் அரசு சிபாரிசு செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ. பதவி இடங்களை நிரப்ப மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன்படி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுச்சேரி ஆளும் கட்சிக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென்று நேற்று பதவியேற்றுக் கொண்டனர். துணை நிலை ஆளுனர் கிரண்பேடி முன்னிலையில் 3 பேரும் நேற்று மாலை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, புதுவையில் வருகிற 8-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுவை சட்டப்பேரவைக்கு பா.ஜனதா 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்ததற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு எம்எல்ஏக்கள் பதவியேற்றது தொடர்பாக நியமன உறுப்பினர்கள் 3பேர், புதுவை அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் துணை நிலை ஆளுனர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமியிடையே அதிகாரப் போட்டி நடந்து வரும் நிலையில் நியமன உறுப்பினர்கள் விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது.

இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறியுள்ளார். உறுப்பினர்களை நியமனம் செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.