Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 12, 2017

நாளை மறுநாள் தலைமை செயலகம் முற்றுகை: கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டம் !


தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 30ம் தேதி கசிவு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்க கோரி கடந்த 1ம் தேதி முதல் கதிராமங்கலத்தில் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பேரணி மற்றும் எண்ணெய் நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்த விளக்க கூட்டம் நடந்தது.11ம் நாளான நேற்று கதிராமங்கலம் மட்டுமின்றி, அருகில் உள்ள திருவிடைமருதூர், ஆடுதுறை, திருப்பனந்தாள், பந்தநல்லூர், சோழபுரம், அம்மாச்சத்திரம் உள்ளிட்ட 15 இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

கதிராமங்கலத்தின் எல்லை தெய்வமான அய்யனார் கோயிலில் அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் திரண்டு கோரிக்கையை சாமியிடம் முறையிட்டு அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு காலை முதல் மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 12ம் நாளான இன்று கதிராமங்கலத்தில் கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் கோயிலில் காத்திருப்பு போராட்டம் இன்றும் நடக்கிறது.

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மக்கள் சேவை இயக்க அகில இந்திய விவசாய பிரிவு தலைவர் தங்கசண்முகசுந்தரம் தலைமையில் பலர் நேற்று போராட்டத்தில் பங்கேற்றனர். விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். இழப்பீடு, காப்பீடு உள்ளிட்டவைகளை முறையாக செயல்படுத்த வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். கதிராமங்கலம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.