Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2017

உத்தரப்பிரதேச சட்டசபையில் வெடிபொருள்! காரசார விவாதம்!!


உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நவீன பிளாஸ்டிக் வெடிபொருள் 60கிராம் பேரவை எதிர்க்கட்சி தலைவர் இருக்கை பகுதியில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சட்டசபையில் காரசாரவிவாதம் நடந்தது.

இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

எம்.எல்.ஏ.க்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மாநில வளர்ச்சி, நலத்திட்டம் குறித்து இங்கு ஆலோசிக்கிறோம்.

இப்போது நமக்கே பாதுகாப்பு தேவை என்பது குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.

இவ்விஷயத்தில் தொடர்புடையவர்கள் யார் என்றாலும் நடவடிக்கையை சந்தித்தே ஆகவேண்டும்.

என்று முதல்வர் பேசினார்.

தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராஜேந்திர சவுத்ரி,

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிப்பதாக இச்சம்பவம் உள்ளது.

பேரவை உறுப்பினர்களை பாதுகாப்பு காரணங்களால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நினைக்க கூடாது என்று தெரிவித்தார்.இதற்கு பதில் அளித்த முதல்வர், சட்டம் ஒழுங்கு விஷயத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்கப் போவதில்லை.

இவ்விஷயத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருக்க தேவையில்லை.

அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.