Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2017

மனைவியின் வெறித்தனம்!.. அலறிய போலீஸ்: இப்படியும் கணவரைக் கொலை செய்ய முடியுமா?


மிக கொடூரமாகவும், யாரும் கண்டுபிடிக்க முடியாத ஐடியாவுடனும் கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்துள்ளார் ஜீவராணி என்கிற பெண்.

மாதத்தில் இருபது நாட்கள் ஊர் ஊராக சென்று மருந்து வியாபாரம் செய்பவர் கணவர் சீனிராம். இவரின் மனைவி தான் கள்ளகாதலன் சீனியோடு சேர்ந்து கணவனை கொலை செய்தவர். இந்த கொலைக்கு கள்ளகாதலன் போட்டு கொடுத்த ரூட் தான் பகீர் ரகம்.

சீனி ஒரு எலக்ட்ரானிக் மெக்கானிக். உடைந்த டுயூப் லைட்டை கொஞ்சமாக உடைத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து கொண்டு தினமும் சாப்பாட்டில் கலந்து கணவனுக்கு கொடுத்துள்ளார் இப்பெண். இந்த லைட் பவுடர் குடலில் தங்கி அரிக்க ஆரம்பித்து இரண்டு மாதங்களில் குடலை அறுத்து தள்ளி ரத்த வாந்தி எடுத்துள்ளான் கணவன் சீனிராம். அதிக வயிறு வலியும் வர மாத்திரை வாங்கி கொடுத்து சமாளித்துள்ளார் அன்பு மனைவி.

ஒரு இரவில் ரத்தம் பேதியாக போய் இரவே இறந்து விட்டான். யாருக்கும் துளி சந்தேகம் வரவில்லை. ஆனால் எட்டு மாதங்கள் கழித்து கள்ளகாதலன் குடித்து விட்டு நண்பர்களிடம் உளற மெல்ல இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்ததால் இருவரும் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டனர்.

முற்றிலும் புத்தம் புது டெக்னிக்கில் நடந்த இந்த கள்ளகாதல் கொலை, விசாரித்த காவல்துறை அதிகாரிகளையே உலுக்கி விட்டதாம். அந்த அப்பாவி கணவன் டியூப்லைட் பவுடரை சாப்பிட்டு விட்டு வலியால் துடித்த விடயம் கேட்டு கண்கலங்கி விட்டனர் என்று கூறுகிறார்கள்.

நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம்? பிடிக்கவில்லை என்றால் விலகி கொள்ளலாம் கொலை செய்ய நமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.