பாரதியார் பணியாற்றிய பள்ளி என்ற பெருமையுடைய மதுரை சேதுபதி பள்ளியில் மாணவ மாணவிகளை ஆர்எஸ்எஸ் ஆசிரியர்கள் தங்களின் கால்களை கழுவ செய்து பூசை செய்தனர். இதனை தடுக்க சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இன்று குரு பூர்ணிமா திதியாம் அதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 108 ஆசிரியர்கள் சேதுபதி பள்ளியில் ஒன்றிணைந்தனர். அங்கு பயிலும் மாணவ மாணவியர்களை கட்டாயப்படுத்தி வரவழைத்த ஆசிரியர்கள், அவர்களின் கால்களை தாம்புழ தட்டில் வைத்து தண்ணீர் கொண்டு கழுவி சுத்தப்படுத்த செய்திருக்கின்றனர். இதில் இந்த பள்ளிக்குள் மாடுகளை அழைத்து சென்று கோ பூசை, பாத பூசை, கங்கா பூசை உள்ளிட்ட பல்வேறு பூசைகளையும் நடத்தியிருக்கின்றனர்.
இதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த அப்பகுதி இளைஞர்கள் உடனே திரண்டு பள்ளிக்குள் சென்று மாணவ மாணவிகளை கட்டாயப்படுத்தி ஆர்எஸ்எஸ் நபர்களின் கால்களை கழுவ செய்வதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் மாணவிகள் கால்கழுவி விடுவதை வேடிக்கை பார்த்த காவல்துறை வாலிபர் சங்கத்தினரை பள்ளிக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதோடு, கைது செய்தனர்.





No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.