Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 26, 2017

ரூபா பேட்டி: சிறையில் சசிக்கு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மையே : அவதூறு வழக்கு போட்டால் சந்திக்க தயார் !


பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா தொடர்பாக வெளியான படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள், உண்மையானவை தான் என டி.ஐ.ஜி ரூபா திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இதனை அவர் உறுதிபடுத்தியுள்ளார். பெங்களூரு சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபா, சசிகலா மற்றவர்களை போல சாதாரண கைதி தான் என்றார். முதல் வகுப்போ அல்லது ஏ வசதி கொண்ட அறையோ சசிகலாவிற்கு கிடையாது என ரூபா தெரிவித்துள்ளார்.

சிறையில் ஒரு வராண்டாவில் இருக்கும் 5 அறைகளுமே சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.  தன்னுடைய பொருட்கள் அனைத்தையும் இந்த 5 அறைகளில் சசிகலா பிரித்து வைத்திருந்ததாக அதிகாரி ரூபா தெரிவித்துள்ளார். சிறை அறையில் சசிகலாவுக்கு ஒரு கட்டில் மற்றும் மெத்தை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சசிகலாவிற்காக தண்டனை கைதி ஒருவர் பிரத்யேகமாக உணவு தயாரித்ததை தாம் பார்த்ததாகவும் ரூபா கூறியுள்ளார். சசிகலா மட்டுமின்றி முத்திரை தாள் மோசடி குற்றவாளி அப்துல் கரீம் சலுகைகள் பெற்றதையும் டி.ஜி.பி-யிடம் அறிக்கையாக அளித்ததாக பேட்டியின் போது ரூபா தெரிவித்துள்ளார்.

சசிகலா குறித்து தாம் அறிக்கையில் குறிப்பிபட்ட அனைத்திற்கும் தேவையான ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ்விகாரத்தில் கடமையை செய்துள்ளதால் அவதூறு வழக்கு தொடரப்படுவது பற்றியெல்லாம் தாம் கவலைபடவில்லை என்றும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். தனது 17 வருட பணிகாலத்தில் நேர்மையாக செயல்பட்டு வருவதால், இதுவரை 26 முறை வேறு வேறு இடங்களுக்கு பணிக்காக தூக்கியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.