Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2017

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறதாம்: மக்களுக்கு சந்தோஷமான செய்தி !


தமிழக அரசின் மதுபான கடைகளால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள நெடுஞ்சாலைகளால் விபத்துகள் ஏற்படுவதாலும் அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்கு தொலைவில் உள்ள கடைகளை மூட வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஊருக்குள் கடைவைக்க ஊழியர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மீறி வைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை பொதுமக்களே அடித்து உடைத்து வந்தனர். மேலும் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அறவழியிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. 2015 -16-ம் நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.125.64 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவன பட்டியலில் டாஸ்மாக் 9-வது இடம் பிடித்துள்ளது. எம்எல்ஏ-க்களின் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தி நிலையில் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற செய்தி பொதுமக்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.