Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2017

ஜூலியின் 'அந்த' வீடியோவை வெளியிட்டவரை பிக் பாஸ் வாழ்த்து ! - வீடியோ


பிக் பாஸ் நிகழ்ச்சி டல்லடித்த நேரத்தில் ஜூலியின் வீடியோ ஒன்றை யாரோ வெளியிட்டதால் சூடுபிடித்துவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை டுபாக்கூர் நிகழ்ச்சி என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். யார் திட்டினாலும் அதை கண்டுகொள்ளாதது மாதிரியே நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். பலர் நிகழ்ச்சியை பார்ப்பதே கலாய்க்கத் தான்.

பிக் பாஸ் டல்லடித்த நேரத்தில் ஜூலியின் உண்மையான முகம் என்று கூறி அவர் நடித்த பாடல் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஜூலியை விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். தற்போது பிக் பாஸை திட்டுவதை லைட்டா குறைத்துக் கொண்டு ஜூலியை விமர்சிக்கிறார்கள்.

ஜூலியை விமர்சிப்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிளஸ் என்று நினைக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். திட்டினால் என்ன, துப்பினால் என்ன நமக்கு விளம்பரம் கிடைக்கிறது என்பது போல் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் சமூக வலைதளங்களை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். அதில் யாரை பற்றி அதிகம் பேசப்படுகிறதோ அவரை நிகழ்ச்சியில் டார்கெட் செய்கிறார்கள் இல்லை அழவிடுகிறார்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று பிக் பாஸ் தன்னை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கும் சொல்வது போல உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.