Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2017

கிரானைட் முறைகேடு விசாரணை அறிக்கை விவகாரம் : குழு மீது சந்தேகம் கொள்வது சகாயத்தின் மீது சந்தேகப்படுவது !


சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இந்த குழு கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. இந்த குழுவில் ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம் பணியாற்றினார். அவருக்கு சம்பளமாக மாதம் ரூ.20 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பளத்தை அவருக்கு கடந்த 8 மாதங்களாக வழங்கவில்லை.

எனவே இந்த சம்பளத்தை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜகோபால் கூறும் போது, இந்த குழுவுக்காக தமிழக அரசு சார்பில் மொத்தம் ரூ.58 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

இப்போது ரூ.5 லட்சம் கூடுதலாக சம்பளம் கேட்கிறார்கள். தாசில்தார் மீனாட்சி சுந்தரம் ஓய்வு பெற்றுவிட்டார் என்று தெரிவித்தார். இதே கேட்ட நீதிபதிகள், இது உயர்நீதிமன்றம் அமைத்த தனி அதிகாரம் படைத்த குழு. இந்த குழுவை முடித்து வைக்க உயர்நீதிமன்றத்தால் தான் முடியும் என்றனர்.

அப்போது குவாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடும் போது, மனுதாரர் குழு தாக்கல் செய்த அறிக்கையில், ஒரு லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்த உடன் குழுவும் முடிந்து விட்டது என்றார். அப்போது சகாயம் தரப்பில் ஆஜரான வக்கீல், குழுவின் அறிக்கை மீது மூன்றாவது நபர் சந்தேகம் எழுப்புவது அதிகாரி சகாயத்தின் நேர்மை மீது சந்தேகம் எழுப்புவது போல் உள்ளது.

இதை தவிர்க்க வேண்டும் என்றார். இதையடுத்து அரசு தரப்பில் நாளை அட்வகேட் ஜெனரல் இந்த வழக்கில் ஆஜராக போவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.