July 25, 2017
ஜனாதிபதிக்கு இ-மெயில் மூலம் முதல் மனுவை அனுப்பிய முன்னாள் நீதிபதி கர்ணன் !
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி கர்ணன், தண்டனையை ரத்து செய்யக்கோரி புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த கர்ணனை, கடந்த மாதம் 20ம் தேதி கோவையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நாட்டின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு முதல் மனுவை முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் அனுப்பியுள்ளார். அதில், தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி பதவி ஏற்ற சில நிமிடங்களில் அவருக்கு முதல் மனு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் தனி செயலாளருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாகவும் மனுவை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கர்ணனின் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு இ-மெயில் மூலம் முதல் மனுவை அனுப்பிய முன்னாள் நீதிபதி கர்ணன் !
Reviewed by Admin
on
July 25, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.