Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2017

பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ குணங்கள்!!


பூசணிக்காயை பலர் உணவில் பயன்படுத்துவதும் குறைவு. பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதனுள் இருக்கும் விதையில்  ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. இது தெரியாமல் பலர், சமைப்பதற்கு பூசணிக்காயை நறுக்கியவுடனேயே விதைகளை அப்படியே வழித்தெடுத்து, வெளியே கொட்டிவிடுவார்கள். பூசணிக்காய் ஒரு சுவையான காய் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது. ஆனால் அதனுடைய விதை மிகவும் சக்தி வாய்ந்தவை.

பூசணி விதையில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்...

பூசணு விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்  ‘இ’ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம்  பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.

ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று  நோய்களியயும் குண்மாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது

பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது.இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது.இது புரோஸ்டேட் விரிவைக்  குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.

பூசணி விதையில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம்  கிடைத்துவிடும்.

பூசணி விதையில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி  விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து  குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த  உணவு இந்த விதைகள்.

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம்  இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல்  பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து  சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.