இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சகாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இதில் வீணாக கூடிய இளைஞர்களின் சக்தியை நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். தலைமை பண்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மணல் உள்ளிட்ட இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும். அரசு அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். கிரானைட் முறைகேடு குறித்து எனது மனசாட்சிபடி விசாரணை செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்திலும், அரசுக்கும் அளித்து விட்டேன். இது குறித்து இனி நீதிமன்றம், அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சகாயம் கூறினார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.