Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2017

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்


அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு தேவையான கற்கள் கொண்டு வரப்பட்டு குவிக்கப்படுகிறது. இதனால் அங்கு  பதற்றமான சூழல் நிலவுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி பஜ்ரங்கதள் கும்பல் இடித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுகையில் இருந்து வருகிறது.   இந்த வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்று மனுதாரர்களில் ஒருவரும், பாஜகவின்  சுப்பிரமணியசாமியும் உச்ச நிதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று யோசனை கூறியது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து நீதிமன்றம் அந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணை  நடத்தி வருகிறது.

இதற்கிடையில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளில் ஆர்எஸ்எஸ் ன் ஒரு பிரிவான விஸ்வஇந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தீவிரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  குறிப்பாக அந்த இடத்தில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டும் திட்டத்தை விசுவ இந்து பரிஷத் அறிவித்து செயல்பட்டு வருகிறது. . கோவில் கட்டத் தேவையான கற்களை நாடு முழுவதும் சேகரிக்கப் போவதாக கடந்த 2015ம் ஆண்டு அறிவித்தது.

அவ்வாண்டு இறுதியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்துக்காக விசுவ இந்து பரிஷத் சேகரித்த கற்கள், 2 லாரிகளில் அயோத்திக்கு வந்து சேர்ந்தன. இப்போது மூன்று டிராக்டர்களில் கோவில் கட்டுவதற்கு கற்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. விசுவ இந்து பரிஷத் கண்காணிப்பின் கீழ் கற்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஆனால், இதனை தடுப்பதற்கோ, பதற்றமான சூழல் உருவாவதை தவிர்க்கவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.