Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2017

காசுக்காக பசுமாட்டின் கிட்னியை திருடிய கொடூரம்; பாவம் மாடு !


பணத்திற்காக மாட்டின் கிட்னியை திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாடுகளை திருடுபவர்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மாட்டின் கிட்னி திருட்டு! ஆம்! இது கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டம் சவனூர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இரவு, யல்லப்பா என்பவரின் மாட்டுத் தொழுவத்திற்குள் மர்மநபர்கள் நுழைந்துள்ளனர். அங்கு கிலாரி ரக பசுமாடுகள் 2, சில எருமை மாடுகள் இருந்துள்ளன.

இந்நிலையில் பசு மாடுகளின் காலை கட்டி, வயிற்றை கிழித்து கிட்னியை எடுத்துள்ளனர். இதற்கிடையில் வித்தியாசமான ஓசை கேட்டு, அருகிலிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 மாடுகளும் உயிரிழந்தன. இதுதொடர்பாக சவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.